Ads (728x90)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட சிலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவித்திருந்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget