எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பிலோ அல்லது சட்டத்தின் ஆட்சியின் ஆதிக்கம் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாத நிலையில், சில குழுக்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள், அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள், அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளை இனவாத மோதல்கள் அற்ற இரண்டு ஆண்டுகளாக மாற்றியமைத்ததற்காக அரசாங்கத்திற்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த உலமா சபை பிரதிநிதிகள், இருப்பினும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.
மதம் அல்லது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மதத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டியது அனைவருக்கும் அன்பைப் பகிர்ந்தளிப்பதேயாகும் என்றும் இந்து குருமார்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.இளைஞர் சமுதாயத்தைப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மீட்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ”முழுநாடுமே ஒன்றாக”தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் இதன்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.



Post a Comment