Ads (728x90)

வெறும் புல் என்று அறுகம்புல்லை விடமுடியுமா என்ன? அதன் மகத்துவம் தெரிந்துதானே பிள்ளையாரே தன் மேனி முழுவதும் சூடிக்கொள்கிறார். எப்பேர்பட்ட மருத்துவ சக்தியும், ஆன்மிக மகத்துவமும் கொண்டது அறுகம்புல். 

இதற்கு இணையான மகத்துவம் கொண்ட இன்னொரு புல்தான் தர்ப்பைப்புல். தர்ப்பைப்புல் என்பது இந்து சமய வழிபாடுகளிலும், சித்த மருத்துவத்திலும் மிக உயர்ந்த இடத்தை வகிக்கும் ஒரு புனிதமான புல் வகையாகும். ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாகவும் இதற்குப் பல அரிய மகிமைகள் உள்ளன.

நம்மால் காண முடியாத தீய கதிர்வீச்சுக்களை போக்கடிக்கும் தன்மையையும், நமக்குள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் தர்ப்பைக்கு உண்டு.

வைதீக காரியங்களின் போது செய்ய வேண்டிய கர்மாவை வேறெந்த சக்தியும் தடுக்காது இருப்பதற்காக தர்ப்பையாலான பவித்ரத்தை அணிகிறோம். சுற்றிலும் இரண்டிரண்டாக தர்பையை வைத்துக் கொள்கிறோம். தர்ப்பை என்பது அக்னியின் பிரதிநிதியாக சொல்லப்படுகிறது. 

கிரகண காலங்களில் ஆதி நாளிலிருந்து பெரியவர்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் தர்ப்பையை கிள்ளிப் போடுவர். கிரகணத்தின்போது தீய கதிர்வீச்சுக்கள் உணவை பாதிக்காத வண்ணம் அது பாதுக்காக்கிறது. இடிதாங்கி எப்படி தனக்குள் இடியின் அத்தனை சக்தியையும் வாங்கிக் கொள்கிறதோ அதுபோலத்தான் தர்ப்பையும் செயல்படுகிறது. 

ஒரு செயலைச் செய்யும்போது நமக்குள்ளிருந்து வரும் சக்தியை தடைசெய்யாது பிரவாகமாக பொங்கி வர தர்ப்பை உதவுகிறது. அதுபோல சக்தியை பரிமாறச் செய்யும்போதும் தர்ப்பையின் பங்கு மகத்தானது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget