இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், தோட்டப்புறப் பகுதிகளிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதால், அதற்காக அப்பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைக் கட்டியெழுப்புவது அந்தப் பணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தோட்டப்புறப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைக் கண்டறிந்து, தோட்டப்புற பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் இந்தப் பட்டறை நடாத்தப்பட்டது.தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புதிய திட்டங்களை ஆரம்பிப்பது, தேசிய மூலோபாய மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் மாதிரிக்கு ஏற்ப திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது, தொழிற்கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



Post a Comment