காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தன்னை ஒரு புலி எனக் குறிப்பிட்டதுடன், நரியை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
22.jpeg)
Post a Comment