முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதி காவல்துறை மாஅதிபர் பாலித சிறிவர்தன ஆகிய மூவரும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த அடிப்படை உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகச் செயற்பட்டு, இவ்விரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை நடத்தியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, அரசியல் உள்நோக்கத்துடன் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரைக் கைது செய்ய முற்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment