Ads (728x90)

2026 ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit) சிறப்புரையாற்ற பூட்டான் சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, திம்பு நகரில் நேற்று பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை - பூட்டான் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

குறிப்பாக கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget