Ads (728x90)

நாட்டில் நிலவும் தொடர் கனமழை காரணமாக 14 பிரதான நீர்த்தேக்கங்களும், 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தொடர்ந்து வான் பாயும் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தெதுருஓயா, இராஜாங்கனை, அலிகொடஆர, அம்பகொலவெவ, அதரகல்ல மற்றும் அம்பேவளை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடிகளினாலும், நான்கு வான் கதவுகள் தலா ஒரு அடியினாலும் திறக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா மூன்று அடிகளினால் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் துருவில வெவ, அங்கமுவ, வெனுரொவ வெவ ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget