Ads (728x90)

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, அக்டோபர் 26ஆம் தேதிக்குள் சூறாவளியாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளன.

வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு அருகில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, தாழமுக்கமாக வலுப்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், இது நாளை காலை வேளையில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்பயணிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget