3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த 'கொரிந்தியன்' என்ற கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த எரிவாயுத் தொகுதியைத் தரையிறக்கும் பணிகள் அக்டோபர் 22 ஆம் தேதி மாலை முதல் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று முன்தினம் பிற்பகலிலேயே ஆரம்பிக்கப்பட்டதால், 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடிந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு இருப்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள் வழமை போன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment