செல்லுபடியாகும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர்கள், நாட்டுக்கு வருகை தரும் போது அதைப் பயன்படுத்தி சட்டபூர்வமாக வாகனங்களைச் செலுத்த முடியும்.
வெளிநாட்டு அனுமதிப்பத்திரத்திற்காக இலங்கை அனுமதிப்பத்திரத்தை ஒப்படைத்தவர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
சாரதி அனுமதிப்பத்திரத்தைத் தொலைத்தவர்கள், காவல்துறையில் முறைப்பாடு செய்வது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி மாற்று அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்குத் திரும்பும் பிரஜைகளுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காகத் தேவையற்ற மேலதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

Post a Comment