Ads (728x90)

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய ஐந்தரை ஆண்டு காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை உடையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget