இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகள் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் முழுமையாகக் குறைவடைந்து நிலைமை சீராகும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகக் குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை வைத்திருப்பதை உறுதி செய்ய மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எரிபொருள் விநியோக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காகவே ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1.jpeg)
Post a Comment