கிளிநொச்சி வடக்கு மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இந்தக் கண் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், 6 மாணவர்களுக்கு மாறுகண், 2 மாணவர்களுக்கு கண் ஒவ்வாமை, 8 மாணவர்களுக்கு குறைந்த பார்வை மற்றும் 10 மாணவர்களுக்கு ஏனைய கண் தொடர்பான பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட பார்வைக் குறைபாடுகளுக்குத் தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்ணாடிகள், உரிய வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவர்களின் வகுப்பறைகளிலேயே வழங்கப்படவுள்ளன.
குறைந்த பார்வை அல்லது மேலதிக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவுக்கு மேலதிக மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
“தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் – கட்டம் II” திட்டம் வடமாகாணத்தின் அனைத்து 13 கல்வி வலயங்களிலும் முதலாம் தர மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

Post a Comment