பாதுகாப்பு நிமித்தம் விடுவிக்க முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு உரிய நட்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு விடயத்தில் பலாலி போன்ற பகுதிகளில் கடந்த காலங்களில் வீதித் தடைகள் போடப்பட்டு வீதிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன. ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் அந்த தடைகளை நீக்கியுள்ளோம். தற்போது அந்த வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறு பெருமளவிலான வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கில் இப்போது ஒரு இராணுவ சோதனைச் சாவடியும் கிடையாது.
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது முறையாக நடக்க வேண்டும். காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும். சில உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மேலும் சிலர் இப்போது உயிருடன் இல்லை. அத்துடன் தாமே உரிமையாளர் என்று வேறு சிலர் வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் முறையாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
2.jpeg)
Post a Comment