Ads (728x90)

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளை புதுப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அச்சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கு ஏற்ப மறுஆய்வு செய்வதற்கும், தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு அமைய அவற்றை புதுப்பிப்பதற்கும் உள்ள தேவையை கருத்திற்கொண்டே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள்: 

1. பிரின்ஸ் சேனாதீர - புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் 

2. பியுமந்தி பீரிஸ் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் 

3. வசந்த ஆரியரத்ன - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் 

4. ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன - பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் 

5. ஏ.சீ. கஜநாயக்க - சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர் 



Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget