அரச சேவையிலுள்ள மற்றும் சேவையிலில்லாத பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த மே 24 ஆம் திகதி நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய முதற்கட்டத்தின் கீழ் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதிபெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள இணைப்பில் தமது பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் இக்கட்டத்தில் தாம் தகுதி பெற்றுள்ளனரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
நேர்முகப்பரீட்சைகளை 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தகுதிபெற்றோரை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கும் இடம், திகதி மற்றும் நேரம் உள்ளிட்ட உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
.jpeg)
Post a Comment