நவராத்திரி விரதம் என்பது அம்பிகையை (சக்தியை) வேண்டி ஒன்பது இரவுகள் (பத்து பகல்கள்) அனுசரிக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாடாகும்.
நவராத்திரி விரதம் என்பது இந்துக்கள் சக்தியை அன்னையின் வடிவில் வழிபடும் விரதமாகும்.
நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடிவமான துர்க்கையாகவும், செல்வத்தின் வடிவமான இலட்சுமியாகவும், கல்வியின் வடிவமான சரஸ்வதியாகவும் விரதமிருந்து வழிபடுவதாகும்.முதல் 3 நாட்கள்: வீரத்திற்கும் தைரியத்திற்கும் உரிய துர்க்கை வழிபாடு.
அடுத்த 3 நாட்கள்: செல்வத்திற்கும் வளத்திற்கும் உரிய மகாலட்சுமி வழிபாடு.
கடைசி 3 நாட்கள்: கல்விக்கும் ஞானத்திற்கும் உரிய சரஸ்வதி வழிபாடு.
பத்தாம் நாள் விஜயதசமி. அன்றைய தினம் ஏடு தொடக்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம். நவராத்திரியுடன் இணைந்ததாக 'கொலு வைத்தல்' முதலான பாரம்பரியங்களும் இடம்பெறும்.
நவராத்திரி விரத வழிபாடு புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை அனுஸ்டிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகத்தின் இயக்கத்திற்கு சக்தி தான் ஆதாரம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி விரதம். அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை.
Post a Comment