Ads (728x90)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் வி.கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ்.வை.எம். கோமஸ், ஏ.எல்.ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ்.எஸ்.எஸ்.பி.டி.எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் கையளிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முந்தைய உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget