Ads (728x90)

நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் புதிய பயணிகள் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்,யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் நெடுந்தீவு உள்ளிட்ட வெளித்தீவுகளுக்கும் இடையில் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின், பிரதான நிலப்பகுதிக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட வெளித்தீவுகளுக்கும் இடையில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குப் போதுமான வசதிகள் இல்லாததால், கடல் வழிப் பயணிகள் போக்குவரத்து சவாலாக மாறியுள்ளது.

இதற்கு தீர்வாக, ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய படகு ஒன்றை நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணிகள் படகு சினோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதன் இயக்க நடவடிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த படகு மூலம் கிடைக்கும் வருமானத்தை சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget