நாட்டில் பௌத்த பிக்குகள் சிலர் முன்னெடுத்து வரும் சர்ச்சைக்குரிய போராட்டங்கள் மற்றும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் குறித்துத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பிரபல பௌத்த மதத் தலைவரான ஓமல்பே சோபித தேரர், பௌத்த பிக்குகள் அனைவரும் நாட்டின் பொதுவான அரச சட்டத்திற்கு உட்பட்டவர்களே தவிர, அவர்களுக்கு எனத் தனியான சிறப்பு உரிமைகளோ, விதிவிலக்குகளோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தின் கௌரவம் மற்றும் பிக்குகளின் ஒழுக்க நெறிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக்கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவிக்கையில், "பௌத்த பிக்குகளுக்கு எனத் தனிப்பட்ட மனித உரிமைகள் என்று எதுவும் கிடையாது. அவர்கள் நாட்டின் அரச சட்டத்திற்கும், நீதித்துறைக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டவர்களே ஆவர். பௌத்த சாசனத்திற்குரிய உன்னதமான கோட்பாடுகளையும், விதிகளையும் பேணிப் பாதுகாக்க முடியாவிட்டால், தயவுசெய்து உடனடியாகக் காவி உடையை (சிவரயம்) துறந்துவிட்டுச் சாதாரண குடிமக்களாக வெளியேறுங்கள்" எனக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment