Ads (728x90)

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றச் செயலொன்றின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அவருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவித்தல் அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget