Ads (728x90)

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கந்தசாமி கிருஷ்ணகுமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட அவர் 10 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். பின்னர், அத்தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து சைனைட் குப்பிகள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆயுத தொடர்புகள் எதுவும் தனக்கு இல்லையென அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

எனினும் தண்டனை காலம் நிறைவு பெற்று 11 ஆண்டுகள் சென்ற பின்னர், இவர் தாயகம் திரும்பியிருந்த நிலையில், இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget