Ads (728x90)

ஹுங்கம பகுதியில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'மீகஸ்அரே கஜ்ஜா' (அருணா விதானகேமகே) மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மித்தெனிய, கடுவன பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இந்தப் பெண், கொலையுண்ட "கஜ்ஜா" என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் கொலையுண்ட சந்தர்ப்பத்தில் கஜ்ஜாவுக்குக் கிடைத்த கடைசி தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி ஆகியவற்றை இந்தச் சந்தேகநபரே அனுப்பியுள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், "பெக்கோ சமன்" என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், உணவருந்துவதற்காக "கஜ்ஜா" மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் குறித்த உணவகத்திற்குத் தந்திரமாக வரவழைத்ததும் இவரே என்பதும் தெரியவந்துள்ளது. அவ்வாறு உணவருந்த வந்தபோதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரிடம் ஆரம்பக் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget