பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதில் பாரிய நடைமுறைத் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக மற்றும் ஆவண ரீதியான தவறுகளாலேயே ஞானசார தேரரின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் ரத்து செய்து, அவர் மீண்டும் சிறை செல்ல நேரிட்டது எனக் கூறி, இதற்காக மகா சங்கத்தினரிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
அமைச்சின் அனுமதியைப் பெறாமல் தனது கையெழுத்தை மாத்திரம் பயன்படுத்தி குறித்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் ஜனாதிபதி பதவியை வகித்த காலத்தில் எனது சட்டப் பிரிவு மற்றும் மேலதிக சிரேஷ்ட செயலாளரினால் இடம்பெற்றுள்ள தவறு காரணமாக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஒருமுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment