பேரியல் பொருளாதார நிலைப்படுத்துதலின் நுண்பொருளாதார அடித்தளங்களுக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
நிலைப்படுத்தும் கொள்கைக்கு புத்துயிரளிக்கும் வகையில் பொருளாதார மாதிரிகளை எவ்வாறு மறுசீரமைக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
பணவீக்கம், உற்பத்தி மற்றும் நுகர்வு போன்ற நுண் பொருளாதார மாறிகளுக்கு இடையிலான புள்ளிவிவரத் தொடர்புகளின் அடிப்படையில் மாதிரிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு நுண் பொருளாதார அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப இவர்கள் தேர்வு செய்தனர்.
இது, தனிப்பட்ட குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் தங்களின் நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment