Ads (728x90)

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் எப்போதும் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே செயற்படும் என தெரிவித்த அமைச்சர், சட்டத்துக்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றங்களையும் செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்களால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, சிறைச்சாலை நிலையியல் கட்டளைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அந்த திருத்தப்பட்ட நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகவே எதிர்காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. எனவே, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு நின்று மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித எண்ணமும் இல்லை என அவர் தெரிவித்தார்.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget