இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அண்மைக்கால வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, இந்தத் தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவு 2,171.4 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 3,483.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 60.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதுவே, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment