Ads (728x90)

களனி, மானெல்வத்தை நாகானந்த சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தில் நடைபெற்ற உலக பௌத்த சங்க சமேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வில் நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து சிறப்பித்துள்ளார்.

இத்தகைய சர்வதேச மட்டத்திலான நினைவு விழாவொன்றை இலங்கையில் நடத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையானது நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் விடயமாகும் என்பதுடன், எமது நாட்டின் பௌத்த மரபுரிமையையும், சமய அடையாளத்தையும் சர்வதேச அரங்கில் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு விசேட சந்தர்ப்பம் இது எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

புத்த பெருமானின் போதனைகள் குறித்து மீண்டும் ஆழமாக ஆராய்வதனாலும், அப்போதனைகளைப் பின்பற்றி நடப்பதனாலும் உலக சமூகத்திற்குப் பெரும் நன்மைகள் கிட்டும் என்பதை உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் இந்த 60 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் சுட்டிக்காட்டியதுடன், மாநாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் சகல விதத்திலும் வெற்றியடைய தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இலங்கையை தேரவாத பௌத்த தர்மத்தின் சர்வதேச மையமாக மாற்றியமைக்கும் நோக்கில் நாகானந்த சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தை ஆரம்பித்து வணக்கத்திற்குரிய போதாகம சந்திம நாயக்க தேரர் எடுத்துள்ள விசேட முன்னெடுப்பையும், இந்த ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர் மேற்கொள்ளும் அயராத முயற்சிகளையும் பாராட்டி, வணக்கத்திற்குரிய தேரருக்கு தனது கௌரவத்துடனான நன்றிகளையும் தெரிவித்தார்.

குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டை உருவாக்க முடியாது எனவும், மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் என பௌத்த போதனையில் குறிப்பிடப்பட்டுள்ளமை பௌத்த தர்மம் எவ்வளவு நடைமுறைச் சாத்தியமான தத்துவம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதில் உலக பௌத்த சங்க சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 நாடுகளின் தலைமைத் தேரர்கள், பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

1966 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் நோக்கம் உலக அமைதியாகும். உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாகானந்த ஆய்வு நிறுவனத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget