Ads (728x90)

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும்,  கள நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கும் 84 நவீன ரக கெப் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நேற்று இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் களச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் 84 நவீன ரக ஒற்றை வண்டிகள் (Single Cab) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

ஒரே தடவையில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாகனத் தொகுதி இதுவென சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களைப் பகிர்ந்தளிக்கும்போது, மனித - யானை மோதல் அதிகமாக இடம்பெறும் பகுதிகளிலும், வன அழிவுகள் அதிகளவில் பதிவாகும் பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைத்து, அவசரகால வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விரைவாகச் செயலாற்றும் திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget