Ads (728x90)

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற 100 கோடி ரூபாவுக்கும் (1 பில்லியன்) அதிகமான பெரும் நிதி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில், கொட்டவில காவல்நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால கைது செய்யப்பட்ட அவர், நேற்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதன் தவணைக் கட்டணங்களைச் செலுத்தியமைக்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை உறுதிப்படுத்தவும் அவர் தவறியுள்ளார். அவரது நவீன ரக கார் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால், குறித்த காரின் லீசிங் தவணைக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget