Ads (728x90)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவுக்கும் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை இந்த விஜயம் பிரதிபலிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.  

இது இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவையும் நெருக்கமான தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget