அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களின் தேர்தலே இவ்வாறு நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை தேர்தல் முறைமையில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் நிர்வாக அலகுசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் குளறுபடிகளே தோற்றம் பெறும் எனவும் அரச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
Post a Comment