Ads (728x90)

அனைத்து அரச துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 2027 ஜனவரி மாதம் மூன்றாவது கட்ட சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் 2027 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் அடிப்படை ஊதிய உயர்வுத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு தனது அறிக்கையை 2027 ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று குறிப்பிட்ட அவர், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முரண்பாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget