Ads (728x90)

இலங்கையில் இயங்கிவரும் இணைய மோசடி மையங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (FBI) குழுவினர் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளனர். 

அமெரிக்கத் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைய, இலங்கை காவல்துறையினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்தக் குழுவினர் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நவம்பர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் இக்குழுவினர், இலங்கையில் இயங்கிவரும் மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது. 

இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், இந்த அதிகாரிகள் குழுவினர் வருகை தந்துள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget