2026 செப்டம்பர் 22 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, நவம்பர் 01 முதல் குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
எனினும், பொதுமக்கள் மற்றும் தனிநபர்களிடையே TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான கோரிக்கை காணப்படுவதைக் கருத்திற்கொண்டு, நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத தனிநபர்கள் இணையவழி மின்னணுச் சேவைகள் (e-Services) தளத்தைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment