ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட குறித்த படகிலிருந்து சுமார் 189.246 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 132.026 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 57.220 கிலோகிராம் ஹெரோயினும் அடங்குகின்றன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இப்படகு இன்று காலை திக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், படகிலிருந்த 10 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அதிகாரிகளால் விரிவாகச் சோதனையிடப்பட்டன.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Post a Comment