Ads (728x90)

பிறர் துயர் போக்க உதவும் துலாம் ராசி அன்பர்களே!
ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு 10-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பொருள் இழப்பு, உடல் உபாதை ஏற்பட வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். கேது 5-ம் இடமான கும்பத்தில் இருந்து 4ம் இடமான மகரத்திற்கு வருகிறார். அதனால் நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

உடல் நலம் பாதிப்பு வரலாம். சனிபகவான் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது அல்ல. ஏழரைச் சனியின் இறுதிக்கட்டமான இதில், சனியின் பார்வை பலத்தால் நன்மை காண்பீர்கள். டிச.18-ல் சனி 3-ம் இடமான தனுசுக்கு மாறிய பின்,  தொழில் வளர்ச்சியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிக்கு 12-ல்  இருக்கும் குருவால் மனக்கவலை, வீண் அலைச்சல் ஏற்பட்டாலும்,  ஆக. 31-க்குப் பிறகு நிலைமை மாறும்.  இருந்தாலும் ஜென்ம குருவாக அவர் ராசிக்கு வருவதால் அதிக நன்மையை எதிர்பார்க்க முடியாது.

2018 பிப்.13ல்  குரு 2ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது சிறப்பான அமைப்பாகும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.இனி விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். சிக்கனம் பின்பற்றுவது அவசியம். கணவன்- மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை குறுக்கிடலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது.  தொழில் வியாபாரத்தில் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்.

சற்று கவனம் தேவை. பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.  மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

விடாமுயற்சி இருந்தால் புதிய சொத்து வாங்க முடியும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.  கேதுவால்  உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். 2018 ஜனவரி– 2019 பிப்ரவரி சனிபகவானால் புதிய முயற்சி வெற்றி  பெறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். பொருளாதார வளம் சிறக்கும்.

குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். 2018 பிப். 13- க்கு பிறகு திருமணம் பெண்களால் பொன்,  பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. 2018 பிப். 13- க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.

பணியாளர்கள்பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். 2018 பிப்.13 க்கு பிறகு குருவின் பலத்தால் மேன்மை உண்டாகும்.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இட, பணிமாற்றம் பெறலாம். கலைஞர்கள் விடாமுயற்சியால்புதிய ஒப்பந்தம் பெறுவர். 2018 பிப்.13-க்கு பிறகு அவப்பெயர், போட்டி முதலியன மறையும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க  வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும்.  2018 பிப்.13-க்கு பிறகு போட்டியில் வெற்றி காணலாம். விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை ஓரளவு பெறலாம். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். 2018 பிப்.13க்கு பிறகு  சுபநிகழ்ச்சி கைகூடும்.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு, சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு தீபம்.



சுறுசுறுப்புடன் பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!
ராசிக்கு 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு, 9-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பின் தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால் முயற்சியில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். 4-ம் வீடான கும்பத்தில் இருந்த கேது, ஜூலை 27ல் 3-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். தெய்வ அருளால் தொட்டது எல்லாம் துலங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  ராசியில் இருக்கும் சனி பகவானால் தற்போது மனக்கவலை, உறவினர் தொல்லை, வெளியூர் வாசம் ஏற்பட்டிருக்கும்.

டிச.18-ல் அவர் 2-ம் இடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு.  11ல் உள்ள குருபகவானால் பொருளாதார வளம் மேம்படும். செப்.1-ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு மாறுவதால் பணவிரயம் ஏற்படலாம். 2018 பிப். 13க்குப் பிறகு  ராசிக்கு மாறுவது சிறப்பானது அல்ல. அவரது பார்வை பலத்தால் நன்மை காணலாம்.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் பொருளாதார வளம் மேம்படும். தடைகளை முறியடித்து செயலில் வெற்றி காண்பீர்கள். குருவால் நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

புதிய வீடு வாங்க அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுக வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் கேதுவால் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டாகும். சனி வக்ர காலம் என்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஆனால் அரசு வகையில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

பணியாளர்களுக்கு வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். ஆக.31-க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  கலைஞர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல் வாதிகள்  சிறப்பான வளர்ச்சி காண்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. மாணவர்கள் முன்னேற்றம் காணலாம்.

குரு பகவானின் பார்வையால் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயிகள் மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியம் மூலம்  நல்ல மகசூல் பெறுவர்.  புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்களுக்கு தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

2018 ஜனவரி– 2019 பிப்ரவரி கேதுவால் பொன் பொருள் சேரும்.  உடல்நலம் மேம்படும். இறையருளால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். 2018 பிப். 13-க்கு பிறகு குருவின் பார்வை பலத்தால் புதிய வீடு, -மனை வாங்க யோகம் கூடி வரும்.

தொழில் வியாபாரத்தில்  வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணியாளர்கள் உயர்ந்த நிலை அடைவர்.  தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் வருமானம் குறையாது. அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். 2018 பிப்.13- க்கு பிறகு விண்ணப்பித்த கடனுதவி, கோரிக்கை கிடைக்கும். கலைஞர்கள் பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். கடந்த காலத்தில் இருந்த தடையனைத்தும் விலகும்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது.  ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம்.  விவசாயிகள்  சிறப்பான பலன் காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.  பெண்கள்  பிள்ளைகளால் பெருமை பெறுவர். குடும்பத்தோடு அடிக்கடி புனித தலங்களுக்கு செல்வர்.

பரிகாரம்: சனியன்று அனுமனுக்கு நெய்தீபம் பவுர்ணமியன்று கிரிவலம் வருதல் செவ்வாயன்று முருகன் வழிபாடு.

Post a Comment

Recent News

Recent Posts Widget