Ads (728x90)

ஏட்டிக்குப் போட்டி, என்பதற்கு எந்த உதாரணத்தையும் காட்ட வேண்டாம், விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் செய்து கொண்டிருப்பதைக் காட்டினாலே போதும். அஜித் அவருடைய முதல் படமான 'பிரேம புஸ்தகம்' தெலுங்குப் படத்தில் 25 வருடங்களுக்கு முன்பு கையெழுத்திட்ட நாள் ஆகஸ்ட் 3. அந்த தினத்தை அஜித் ரசிகர்கள் நேற்று அஜித்தின் 25 வருடம் என சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள்.

திரையுலகப் பிரபலங்களும் அதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பொதுவாக நடிகர்களின் முதல் பட வெளியீட்டுத் தேதியிலிருந்துதான் அவர்களது திரையுலகப் பயணத்தை கணக்கில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், அஜித் ரசிகர்களுக்கு அஜித் சம்பந்தமான எந்த தினமும் கொண்டாட்டம் தான்.

அஜித் ரசிகர்களின் நேற்றைய கொண்டாட்டம் விஜய் ரசிகர்களுக்கக் கொஞ்சம் கடுப்பை ஏற்றிவிட்டது போலும். விஜய் சம்பந்தமான ஏதாவது ஒன்றைக் கொண்டாடியே ஆக வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள். அதனால், விஜய் சம்பந்தமான பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். கடைசியில் அவர்களுக்குக் கிடைத்தது விஜய்யின் 'தெறி ஹிந்தி டப்பிங்' படத்தின் யுடியூப் சாதனை. யு டியூபில் ஜுலை 1ம் தேதி வெளியிடப்பட்ட 'தெறி' ஹிந்தி முழு படத்தின் வீடியோ 2 கோடியே 30 லட்சம், அதாவது 23 மில்லியன் கடந்ததை நேற்று கொண்டாடி, அதை டுவிட்டரில் டிரென்டிங்கிலும் வரவைத்துவிட்டார்கள்.

அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'மெர்சல்' படங்கள் வந்து வசூல் செய்து, ஓடி முடியும் வரை இன்னும் இது போல பல டிரென்டிங்குகளைப் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget