Ads (728x90)


உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ்நாட்டிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி துவங்கிய போதே எதிர்ப்பு கிளம்பியது. இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கமல் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு இருந்தாலும் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும், அடிதட்டு மக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதாகவும், இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு கேடானது என்றும், இதை தடை செய்ய சொல்லி மாநில மற்றும் மத்திய அரசுகளை கேட்டு கொண்ட பின்னரும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

கமல் - ஷக்திக்கு நோட்டீஸ் :
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் இசையை கொச்சைப்படுத்தியதாக கூறி தமிழ்நாடு இசை வேலாளர் சங்கம், கமல் மற்றும் ஷக்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதோடு இந்த சம்பவத்திற்கு இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget