ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவ குசா. பாபி இயக்கி வரும் இந்த படத்தில் நிவேதா தாமஸ், ராக்ஷி கண்ணா நாயகிகளாக நடிக்கிறார்கள். செப்டம்பர் 21-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் ஜூனியர் என்டிஆர், ஜெய் லவ குசா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.
மேலும், இந்த படத்தின் ஜெய் கேரக்டரின் பர்ஸ்ட்லுக், மற்றும் டீசர் கடந்த மாதம் வெளியாகியுள்ள நிலையில், நேற்று இரண்டாவதாக லவ குமார் கேரக்டரின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கதைப்படி, இந்த கேரக்டரில் தான் ஜூனியர் என்டிஆர் நல்லவராக நடிக்கிறாராம். முதலில் வெளியான ஜெய் கேரக்டரின் டீசர், போஸ்டருக்கு வரவேற்பு கொடுத்தது போலவே இந்த லவகுமார் கேரக்டரின் போஸ்டருக்கும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து இணையதளங்களில் டிரன்ட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment