Ads (728x90)

ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் 'ஜப் ஹேரி மெட் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இம்தியாஸ் அலி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் ஷாருக்கான். அந்தவிதமாக சமீபத்தில் சேனல் ஒன்றின் பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக்கானுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

விஷயம் இதுதான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் வி.ஜி என்கிற வைஷ்ணவ் கிரிஷ். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கானின் 'ரயீஸ்' படத்தில் இருந்து 'ஷாலிமா' என்கிற பாடலை மிக அற்புதமாக வைஷ்ணவ் பாட, அதை ரசித்தவாறே தானும் அந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தார் ஷாருக்கான். அதை தொடர்ந்து வைஷணவ்வை அனைவரும் பாராட்ட, அப்போதுதான் ஷாருக்கானே எதிர்பாராத விதமாக அவரிடம் அந்த கோரிக்கையை வைத்தார் விஷ்ணவ்..

“நீங்கள் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனை அலேக்காக தூக்கினீர்களே.. அதேபோல நானும் உங்களை ஒருமுறை தூக்க ஆசைப்படுகிறேன்... தூக்கிப்பார்க்கவா..?” என கேட்டார் வைஷ்ணவ். “இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கையை என்னிடம் யாரும் வைத்ததில்லை.. இதுதான் முதல்முறை என்பதால் அதற்கு நான் மரியாதை கொடுத்தே ஆகவேண்டும்” என கூறியபடியே மேடையேறினார் ஷாருக்கான். ஆஜானுபாகுவான உருவத்தில் இருந்த வைஷ்ணவ், ஷாருக்கானை தூக்குவதற்கு பெரிய அளவில் சிரமமெல்லாம் படவில்லை.. ஷாருக்கானை ஜஸ்ட் லைக் தட் அவர் அலேக்காக தூக்கியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget