அதர்வாவுடன் நடித்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் முதன்முறையாக அதிரடியாக கிளாரை வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால் அந்த படம் தோல்வியடைந்துவிட்டது.
இந்த படத்தில் ரெஜினாவின் கிளாமரும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால் கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி விடும் என்று கணக்குப்போட்ட ரெஜினா, அந்த படம் தோல்வியடைந்ததோடு தனது கிளாமரும் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதால் மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, இனிமேல் தேவையில்லாமல் அதிகப்படியான கிளாமராக நடித்து பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment