Ads (728x90)

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது பாலகிருஷ்ணாவின் 102வது படமாகும். அதுமட்டுமல்ல நயன்தாரா-பாலகிருஷ்ணா இணையும் மூன்றாவது படமும் கூட.

இப்படத்தின் ஷூட்டிங் நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பாலகிருஷ்ணா, தனது உதவியாளரை அழைத்ததோடு அவரை அடித்து, தனது காலில் உள்ள ஷூவை கழற்றும்படி கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகராக மட்டுமல்லாது எம்எல்ஏ.,வாகவும் உள்ள பாலகிருஷ்ணா, தனது உதவியாளரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget