Ads (728x90)

ஹரியானாவில் இந்திய ஹொக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஹொக்கி வீராங்கனை ஜோதி குப்தா, இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார். 


20 வயதான அவர் கடந்த 2ஆம் திகதி ரோடாக்கில் உள்ள பல்கலைக் கழகத்துக்கு தனது சான்றிதழில் உள்ள பெயர் எழுத்துப் பிழைகளை சரி செய்யசெல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. .
ஆனாலும் அவருடைய இந்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை என்றும், ஜோதி குப்தாவின் மரணம் குறித்த விசாரணை ஹரியானா பொலிஸாரினால் முன்னெடுக் கப்பட்டு வருவ தாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget