Ads (728x90)

பெங்களூரு அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 31–32 என போராடி தோல்வி அடைந்தது.
இந்தியாவில், புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசன் நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த ‘பி’ மண்டலத்துக்கான லீக் போட்டியில், சச்சின் சக உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை சந்தித்தது.

துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, முதல் பாதி முடிவில் 23–8 என முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணிக்கு நெருக்கடி தந்து, புள்ளிகளை பெற்றது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 31–32 என்ற கணக்கில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்றது. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வீழ்ந்திருந்தது.

பெங்களூரு அணிக்கு ரோகித் குமார் (11 புள்ளி) கைகொடுத்தார். தமிழ் தலைவாஸ் அணிக்கு அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகள் பெற்றுத் தந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget