Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பது போன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget