Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் மீதான கொலை முயற்­சி­யின் முக்­கிய சூத்­தி­ர­தாரி எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் ஆஸ்­தி­ரே­லிய வாசியை நாடு கடத்­து­வ­தற்­காக, விசா­ர­ணைக் குழு­வி­னர் இந்த வாரம் அந்த நாட்­டுக்­குச் செல்­ல­வுள்­ள­னர்.
நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக் கொலை செய்ய முயற்­சித்­தமை, உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தும் வெடி­பொ­ருள்­கள் வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னாள் போரா­ளி­கள் சிலர் ஜன­வரி மாதம் 15ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­னர்.
இவர்­கள் கிளி­நொச்சி, வட­ம­ராட்சி மற்­றும் மன்­னா­ரைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளின் அடிப்­ப­டை­யில், கொலை முயற்­சி­யின் முக்­கிய சந்­தேக நபர் ஆஸ்­தி­ரே­லிய வாசி என்று கண்­ட­றி­யப்­பட்டு கிளி­நொச்சி நீதி­மன்­றில் பொலி­ஸார் அத­னைத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர்.
அந்த நாட்டு அர­சின் மூலம் அவரை நாடு கடத்­து­வ­தற்­கான முயற்சி தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அவரை ஏன் நாடு கடத்­த­வேண்­டும் என்ற ஆவ­ணங்­க­ளு­டன், இலங்­கை­யி­லி­ருந்து விசா­ர­ணைக் குழு­வி­னர் இந்த வாரம் ஆஸ்­தி­ரே­லியா செல்­ல­வுள்­ள­னர். அந்த நாட்டு அர­சி­டம் ஆவ­ணங்­கள் கைய­ளிக்­கப்­ப­டும். ஆஸ்­தி­ரே­லிய அரசு திருப்­தி­ய­டைந்­தால் சந்­தே­க­ந­பர் நாடு­க­டத்­தப்­ப­டு­வார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget