Ads (728x90)

கைப்­பற்­று­கின்ற போதைப் பொருள்­களை என்ன செய்­கின்­றீர்­கள்?’’ இவ்­வாறு அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் நேற்­றுத் திடீ­ரெ­னக் கேட்­டார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்நா­யக்க­வி­டமே அவர் இந்­தக் கேள்­வி­யைக் கேட்­டார்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. போதைப் பொருள் பாவனை அதி­க­ரிப்­புத் தொடர்­பான விட­யம் பேசப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தது. அப்­போது திடீ­ரென ‘‘பல இடங்­க­ளில் போதைப் பொருள் கைப்­பற்­றப்­ப­டு­வ­தாக அறி­கின்­றேன். அதனை நீங்­கள் என்ன செய்­கின்­றீர்­கள்?’’ என்­றார் பாது­காப்பு அமைச்­சரை நோக்கி.
திடீ­ரென எழுப்­பப்­பட்ட அந்­தக் கேள்­வி­யால் திக்­கு­முக்­கா­டிப் போனார் அமைச்­சர். அவ­ரது பதி­லில் திருப்­தி­ய­டை­யாத அரச தலை­வர், இது தொடர்­பான ஒழுங்­கு­மு­றையை தனக்­குத் உடன் அறி­யத்­த­ரு­மாறு அறி­வு­றுத்­தி­னார்.
போதைப் பொருள் கட்­டுப்­ப­டுத்­தல் தொடர்­பான விட­யங்­களை ஒழுங்­கு­ப­டுத்த அமைச்­சர்­க­ளான சுசில் பிரே­ம­ஜ­யந்த, விஜ­ய­தாச ராஜ­பக்ச, சாகல ரத்­னா­யக்கா ஆகி­யோரை உள்­ள­டக்­கிய குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget