இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டமைக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வரவேற்பளித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
“ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா, இலங்கை கடற்படையில் பல தசாப்தங்களாக விசுவாசத்தோடு சேவையாற்றியுள்ளார். இன்று இவர் கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment